நரசிங்கம் கால்வாயில் ஆனந்த குளியல் வெயிலுக்கு இதமாக குதூகலம்

 

மதுரை, ஜூலை 29:மதுரையில் ஒத்தக்கடை நரசிங்கம் கால்வாயில் வெயிலுக்கு இதமான ஆனந்த குளியல் போடுவதில் பொதுமக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. விவசாய பாசனத்திற்காக வைகை அணையில் தண்ணீர் கடந்த 25 நாட்களுக்கு முன்னர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் அலங்காநல்லூர், வாடிப்பட்டி, கள்ளந்திரியை கடந்து ஒத்தக்கடை வரை பாசன கால்வாயில் செல்கிறது.

அதன்படி தற்போது இப்பகுதிகளில் உள்ள பாசன கால்வாய்களின் இருபுறமும் உள்ள கரைகளை ஒட்டியவாறு தண்ணீர் செல்வதால் இதில் குளிப்பதற்கு உள்ளுர் மட்டுமல்லாமல், வௌியூர்களில் இருந்தும் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் நூற்றுக்கணக்கானேர் படையெடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று வார விடுமுறை என்பதால், ஒத்தக்கடை நரசிங்கம் பகுதியில் உள்ள கால்வாயில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குளித்து மகிழ்ந்தனர். கடந்த சில நாட்களாகவே மதுரையில் பகல் வேளையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் இதிலிருந்து விடுபட கால்வாய்களில் ஆனந்த குளியல் போடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

The post நரசிங்கம் கால்வாயில் ஆனந்த குளியல் வெயிலுக்கு இதமாக குதூகலம் appeared first on Dinakaran.

Related Stories: