கடந்த 6 மாதத்துக்கு முன் சஞ்சுமாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. மனைவி, குழந்தையை பார்க்க தஞ்சைக்கு ஷாஜகான் சென்றார். அப்போது குழந்தையை பார்க்க மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மறுத்து விட்டனர்.
இதனால் மனமுடைந்த ஷாஜகான், தினம்தோறும் மதுகுடித்து விட்டு வந்து பெற்றோரிடம் புலம்பி வந்தார். இதனால் சஞ்சுமாவின் பெற்றோரிடம், ஷாஜகானின் பெற்றோர் பேசினர். அப்போது எனது மகள் விவாகரத்து செய்ய விரும்புகிறாள். இனி தொந்தரவு செய்ய வேண்டாம் என அவர்கள் கூறி விட்டனர்.
இதனால் இஸ்லாமிய வழக்கப்படி தலாக் கூறி விவகாரத்து செய்து விடுவாரோ என்ற அச்சத்தில் ஷாஜகான் இருந்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் ஷாஜகான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பேரன் இறந்த தகவல் கிடைத்ததும் சமயபுரம் அருகே உள்ள ஈச்சம்பட்டியை சேர்ந்த ஷாஜகானின் பாட்டி ஆமினா (70) நேற்று காலை வந்தார். அப்போது ஷாஜகானின் உடலை பார்த்து கதறி அழுத ஆமினா திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post மனைவி விவாகரத்து கேட்டதால் காதல் கணவர் தற்கொலை: உடலை பார்த்து கதறிய பாட்டி மயங்கி சாவு appeared first on Dinakaran.