பூதலூர் பகுதியில் அறுவடைக்கு தயார் நிலையில் குறுவை சாகுபடி

திருக்காட்டுப்பள்ளி : பூதலூர் தாலுகாவில் முன்பட்ட குறுவை சாகுபடி நெல் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகாவில் கடந்த ஆண்டு மேட்டூரிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து அதில் மின்மோட்டார் பொருத்தி முன்பட்ட குறுவை சாகுபடி செய்திருந்தனர்.

மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு அந்த தண்ணீரை கல்லணை காவிரி, மற்றும் வெண்ணாறு, கல்லணைக் கால்வாய்களில் அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள், மாவட்ட கலெக்டர்கள், அரசு அதிகளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு விவசாயிகள் விவசாயம் செய்தனர். விவசாயிகள், முன்பட்ட குறுவை சாகுபடியை அறுவடை செய்தனர். சம்பாதாளடிக்கு மேட்டூரிலிருந்து தண்ணீர் வரும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து ஏமாந்து போயினர். மீண்டும் மின்மோட்டாரை பயன்படுத்தி விவசாயிகள் சம்பா தாளடி நடவு பணி முடித்து அறுவடையை நிறைவு செய்தனர்.

முன்பட்ட குறுவை சாகுபடிக்காக நாற்றங்கால் அமைத்து நடவு பணி செய்து தற்பொழுது பூதலூர் வட்டாரத்தில் சுமார் 5000 ஏக்கரில் குருவை சாகுபடி செய்த விவசாயிகள் தங்களது விலை நிலங்களில் விளைந்துள்ள முன் பட்டகுறுவை சாகுபடி நெல் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.கர்நாடக அரசும் தமிழகத்திற்கு தண்ணீர்தர மறுத்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கர்நாடக பகுதிகளில் பெய்து வரும் தொடர் மலையால் அங்குள்ள நீர்நிலைகள் அணைகளில் நிரம்பி வருகிறது.

அதனால் கேட்காமலேயே உபரிநீர் வினாடிக்கு 70 ஆயிரம் கன அடிக்கு மேல் திறக்கப்பட்டு மேட்டூர் அணையில் ஒரே நாளில் ஏழு அடி உயர்கின்ற அளவுக்கு இயற்கை அன்னை ஒரு வரப்பிரசாதமாக மழையை தந்துள்ளது.மேட்டூர் அணை தற்போது ஓரிரு தினங்களில் நிரம்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெறும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த வருடம் குருவை சாகுபடிக்கு தான் தண்ணீர் வரவில்லை, ஆனால் குருவை சாகுபடி அறுவடை முடிந்து சம்பா தாளடிக்கு முழுமையாக தண்ணீர் கிடைக்க இயற்கை அன்னை உதவி செய்ததற்காகவும் விவசாயிகள் இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.

மேலும் மேட்டூரில் இருந்து எப்பொழுது டெல்டா விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுவார்கள் என்று கல்லணையில் உள்ள காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆகிய ஆறுகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. தண்ணீரின் வரவிற்காக புதுப்பொலிவு பெறும் வகையில் கல்லணை அனைத்து பணிகளையும் அரசு அதிகாரிகள் செவ்வனே செய்து வருகின்றனர்.

The post பூதலூர் பகுதியில் அறுவடைக்கு தயார் நிலையில் குறுவை சாகுபடி appeared first on Dinakaran.

Related Stories: