தாராபுரத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 

தாராபுரம், ஜூலை 26: தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட கிளை தலைவர் செந்தில்குமார், தலைமை வகித்தார். வட்ட கிளை செயலாளர் தில்லை அப்பன் கோரிக்கை விளக்க உரையாற்றினார். வட்டக்கிளை இணைச் செயலாளர்கள் சுமதி, தங்கவேல், தேவகி, கண்ணாச்சி, சந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு பேச்சாளராக மாவட்ட இணைச்செயலாளர் மேகலிங்கம் கலந்து கொண்டார். இதில் ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்வைத்த கோரிக்கைகள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.

புதிய பென்ஷன் திட்டம் ரத்து, ஒன்றிய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது, வருமான வரி உச்சவரம்பு 10 லட்சமாக உயர்த்துவது, ஒப்பந்த பணி நியமனம் ரத்து, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை. 8வது ஊதியக்குழு அமைக்காதது, மேலும் பட்ஜெட்டில் ஒட்டுமொத்தமாக தமிழகம் முற்றிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் ஊழியர்களுக்கு எதிரான அணுகுமுறைக்கும், மக்கள் விரோத கொள்கைகளை தொடர்ந்து கடைபிடிக்கும் ஒன்றிய அரசை கண்டிக்கின்றோம் என கோஷம் எழுப்பினர்.

The post தாராபுரத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: