மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் மாணவர்களுக்கு பயிற்சி துவங்கியது

 

மேட்டுப்பாளையம், ஜூலை 26: அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தின் விரைவு விக்யான்-கார்யாஷாலா நிதியுதவியுடன் ‘‘மரப்பயிர் வினையியலில் உயர் தொழில்நுட்பங்கள்’’ என்ற தலைப்பில் நேற்று முன்தினம் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாணவர்களுக்கு பயிற்சி துவங்கியது. இதில் தமிழ்நாடு வேளாண் பல்கலை பயிர் மேலாண்மை இயக்குநரக இயக்குநர் கலா ராணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி வகுப்புகளை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர், காலநிலை, ஸ்மார்ட் விவசாயம் மற்றும் நீடித்த வேளாண்மைக்கு மரப்பயிர் வினையியலின் பங்கு குறித்து விளக்கமாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். வனக்கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணியம் தலைமையேற்று இப்பயிற்சியின் நோக்கம், முக்கியத்துவம் குறித்து தலைமையுரை ஆற்றினார்.

இப்பயிற்சியில் தமிழகம், பஞ்சாப், குஜராத், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 15 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி வகுப்பில் வன உயிரியல் மற்றும் மர மேம்பாட்டுத்துறை தலைவர் ரேவதி, இணை பேராசிரியர் சுஜாதா மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்பயிற்சியானது நேற்று முன்தினம் தொடங்கி வரும் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் மாணவர்களுக்கு பயிற்சி துவங்கியது appeared first on Dinakaran.

Related Stories: