ஆடித்திருவிழாவை முன்னிட்டு கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பால்குடம் ஊர்வலம்

 

புதுக்கோட்டை, ஜூலை 26: புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் ஆடித்திருவிழாவையொட்டி பால்குடம் ஊர்வலம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து சென்று வழிபட்டனர். அன்னதானமும் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு கடந்த இரண்டு வாரம் முன்பு ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் நிகழ்ச்சி நடந்தது.

அதனைத் தொடர்ந்து கிராமங்களில் உள்ள காவல் தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து படையலிட்ட நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு காப்புக்கட்டுதலுடன் ஆடிப் பெருந்திருவிழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மன் சிறப்பு அலங்காங்களில் வழிபாடுகளும், வான வேடிக்கைகளுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் புடைசூழ அலங்கார வாகனங்களில் அம்மன் வீதி உலாவும் இரவு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் கீரமங்கலத்தில் ஒவ்வொரு நாளும் கரைகாரர்களால் பால்குடம் எடுத்தல், அன்னதான நிகழ்ச்சிகளும் நடக்கிறது. டிரம்ஸ் இசைக்கலைஞர்களின் இசையோடு வானவேடிக்கைகளுடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக பால்குடம் தூக்கிச் சென்று அம்மனுக்கு பால் அபிசேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஒவ்வொரு நாளும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை அன்னதானமும் வழங்கப்படுகிறது.

The post ஆடித்திருவிழாவை முன்னிட்டு கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பால்குடம் ஊர்வலம் appeared first on Dinakaran.

Related Stories: