காவிரி நீர், மேகதாது அணை விவகாரம்: ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்திக்க டெல்லி புறப்பட்டார் அமைச்சர் துரைமுருகன்.!!

டெல்லி: காவிரி நீர், மேகதாது அணை விவகாரம் குறித்து ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்திக்க அமைச்சர் துரைமுருகன் டெல்லி புறப்பட்டார். தமிழ்நாடு-கர்நாடகா இடையே காவிரி ஆற்றில் தண்ணீரை பங்கிட்டுக்கொள்வது தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் 32வது காவிரி மேலாண்மை கூட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான 45 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகா அரசு தர வேண்டும் என்பதை நீர்வளத்துறை செயலாளர் மணி வாசகம் வலியுறுத்தி இருந்தார். இரு மாநிலங்களுக்கு இடையே காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக இந்த ஆணையங்கள் அவ்வப்போது உத்தரவிட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி பயணம் செல்கிறார்.

அவர் இன்று மாலை 4 மணியளவில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை சந்தித்து பேச உள்ளார். காவிரி மேகதாதுவில் அணைக்கட்டுவதற்கு அனுமதி வழங்கக்கூடாது. ஆகஸ்ட் மாதத்திற்கான 45 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகா அரசு தர வேண்டும் என்பதை பற்றி பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், முல்லை பெரியாறு விவகாரம் குறித்து அவர் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காவிரியில் உரிய நீரை கர்நாடக அரசிடமிருந்து பெற்று தர வேண்டும் என்றும் ஒன்றிய அரசிடம் வலியுறுத்த உள்ளார்

The post காவிரி நீர், மேகதாது அணை விவகாரம்: ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்திக்க டெல்லி புறப்பட்டார் அமைச்சர் துரைமுருகன்.!! appeared first on Dinakaran.

Related Stories: