விவசாயிகளை இயற்கை உரம் வாங்க நிர்பந்திப்பதை கைவிடக் கோரும் வழக்கு: அரசுகள் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஒன்றிய அரசின் நபார்டு வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கி வருகிறது. இந்த கடன் வசதியைப் பெறும் விவசாயிகள், டான் பெட் வழங்கும் இயற்கை உரத்தை வாங்க வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுவதாக கடலூரைச் சேர்ந்த விவசாயி ஜோதிபாசு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய இந்த இயற்கை உரங்களால் எந்த பயனும் இல்லை. டான்ஃபெட் மூலம் விற்கப்படும் உரங்கள் டன்னுக்கு 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது என்று கூறியிருந்தார். இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி கே.குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் புருசோத்தமன் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு குறித்து மூன்று வாரங்களில் ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

The post விவசாயிகளை இயற்கை உரம் வாங்க நிர்பந்திப்பதை கைவிடக் கோரும் வழக்கு: அரசுகள் பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: