சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய பட்ஜெட் நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான பட்ஜெட் அல்ல. ஆதரவுக் கட்சிகளை சமாதானப்படுத்தி, ஆட்சியை தக்க வைத்து, பதவியை பாதுகாத்துக் கொள்ளும் பட்ஜெட். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாடு என்கிற பெயரையே உச்சரிக்காதது மாபெரும் வரலாற்று துரோகமாகும். 2021ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபோது அவர் தெரிவித்த முதல் அறிவிப்பு, வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் நான் முதலமைச்சராக இருந்து பணியாற்றுவேன் என்பதாகும். இதனை பிரதமர் மோடி கற்றுக் கொண்டதாக தெரியவில்லை. பேரிடர் நிதி, சென்னை 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட எதற்கும் நிதி ஒதுக்கவில்லை. ஒட்டு மொத்தத்தில் நிதிநிலை அறிக்கை வன்மத்தின் வெளிப்பாடாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post ஒன்றிய அரசின் பட்ஜெட் வன்மத்தின் வெளிப்பாடு: விவசாயிகள்-தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.