குலப்பம்பட்டி கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி தூய்மையாக உள்ளதா?

*கலெக்டர் ஆய்வு

புதுக்கோட்டை : குலப்பம்பட்டி கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி தூய்மையாக உள்ளா? என்று கலெக்டர் அருணா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், மழையூர் கிராமம், முத்துலெட்சுமி திருமண மஹாலில் நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வர்” அமைச்சர் ரகுபதி, மாவட்ட கலெக்டர் அருணா, தலைமையில் நேற்று மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை பார்வையிட்டு, மக்களிடம் கோரிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். இம்முகாமில், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், பலவராயன்பத்தை ஊராட்சி, குலப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், குடிநீர் தூய்மை இல்லாமல் வருகிறது அமைச்சர் ரகுபதி, கோரிக்கை மனு அளித்தார்.

உடனடியாக இம்மனுவின்மீது உரிய நடவடிக்கை எடுத்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர். அதனைத்தொடர்ந்து, இந்த கோரிக்கை மனுவின்மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, மாவட்ட கலெக்டர் அருணா, கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், பலவராயன்பத்தை ஊராட்சி, குலப்பம்பட்டி கிராமத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அந்த கிராமத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் செயல்பாடுகள், குடிநீரின் தன்மை உள்ளிட்ட பல்வேறு பணிகளின் நிலைகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, குடிநீர் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் குடிநீர் தூய்மையாக இருந்தது. இருப்பினும், குடிநீரினை வடிகட்டி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றுவதற்கும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை தூய்மையான முறையில் பராமரித்திடவும் தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்அருணா, அறிவுறுத்தினார். இந்நிகழ்வில், உதவி செயற்பொறியாளர் (த.கு.வ.வா.) ராஜகோபால், உதவிப் பொறியாளர் பவித்ரா, தாசில்தார் ஜபருல்லா, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராமன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தினர்.

The post குலப்பம்பட்டி கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி தூய்மையாக உள்ளதா? appeared first on Dinakaran.

Related Stories: