இது பீகார், ஆந்திரா பட்ஜெட்: திரிணாமுல் கடும் தாக்கு

ஒன்றிய நிதிநிலை குறித்து திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் குணால் கோஷ் தன் ட்விட்டர் பதிவில், “இது ஒன்றிய நிதிநிலை அறிக்கை என சொல்லக் கூடாது. இது பீகார், ஆந்திரா மாநிலங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் பட்ஜெட். ஒருவரின் நாற்காலியை காப்பாற்றி கொள்ள சிலரை மகிழ்ச்சியுடன் வைத்திருக்க உதவும் நிதிநிலை அறிக்கை.

மேற்குவங்கத்தை மோடி புறக்கணித்தாலும், முதல்வர் மம்தா பானர்ஜியின் முன்னோடியான, வெற்றிகரமான சில திட்டங்களை இந்த பட்ஜெட் பிரதிபலிக்கிறது. தேசத்தின் முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண தவறி விட்ட நிதிநிலை அறிக்கையில், வெறும் புள்ளி விவரங்கள், சொல்லாட்சிகளே உள்ளன” என்று விமர்சித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் தேசிய தொடர்பாளர் அபிஷேக் பானர்ஜி, “ஆந்திரா, பீகார் போன்ற மாநிலங்களுக்கானஒதுக்கீட்டை திரிணாமுல் எதிர்க்கவில்லை. ஆனால் அதேசமயம், பாஜவுக்கு வாக்களிக்காதவர்கள் பற்றி சுவேந்து அதிகாரி அண்மையில் பேசியதை உறுதி செய்யும் விதமாக மேற்குவங்கத்தை பாஜ அரசு தொடர்ந்து புறக்கணித்து, வஞ்சித்து வருகிறது. இதற்கான பாடத்தை மேற்குவங்க மக்கள் தருவார்கள்” என்றார்.

The post இது பீகார், ஆந்திரா பட்ஜெட்: திரிணாமுல் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: