டெல்லி: 2024-25-ம் ஆண்டு பட்ஜெட்டுக்கு ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தேர்தலுக்கு முன்பாக பிப். 1ல் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா தாக்கல் செய்திருந்தார். நாடாளுமன்ற 18வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த மாதம் பதவியேற்றது. இதையடுத்து இன்று (ஜூலை 23) 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். பிரதமர் நரேந்திர மோடி 3வது முறை பதவியேற்ற பின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
வரிச்சலுகைகள், புதிய அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. 2024-25-ம் ஆண்டு பட்ஜெட்டுக்கு ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. காலை 11 மணிக்கு பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
The post 2024-25-ம் ஆண்டு பட்ஜெட்டுக்கு பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் appeared first on Dinakaran.