ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்

 

கோவை, ஜூலை 23: கோவை மாவட்ட பொறியியல் பொது தொழிலாளர் சங்க (ஏஐடியுசி) 25ம் ஆண்டு மாநாடு கோவை காட்டூர் தியாகிகள் நிலையத்தில் நேற்று முன்தினம் நடந்தது. வழக்கறிஞர் எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சங்க பொருளாளர் ஏ.சுப்பிரமணியன் மாநாட்டு கொடி ஏற்றிவைத்தார். சங்க துணை பொதுச்செயலாளர் சி. தங்கவேல் வரவேற்றார்.

என்.ரமேஷ்குமார் அஞ்சலி தீர்மானம் முன்மொழிந்தார். ஏஐடியுசி தேசிய செயலாளர் டி.எம்.மூர்த்தி இம்மாநாட்டை துவக்கிவைத்து பேசினார். மாநில செயலாளர் எம்.ஆறுமுகம், மாவட்ட செயலாளர் சி.சிவசாமி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பி.மவுனசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். வழக்கறிஞர்கள் கே.சுப்பிரமணியன், எஸ்.ராதாகிருஷ்ணன், டி.சதீஷ்சங்கர் மற்றும் ஜே.எம்.பாஷா ஆகியோரை பாராட்டி சங்கத்தின் தேசிய செயலாளர் டி.எம்.மூர்த்தி சால்வை அணிவித்தார்.

மாவட்ட பொதுச்செயலாளர் கே.எம்.செல்வராஜ் நிலை அறிக்கையை முன்வைத்து பேசினார். இதில், ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்ட முடிவில், செயலாளர் எம்.ராமச்சந்திரன் நன்றி கூறினார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில துணை செயலாளர் எல்.ஜான் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.

The post ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: