இந்நிலையில் விவாகரத்து தொடர்பாக மயிலாடுதுறை அருகே நீடூரில் வசிக்கும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ஆதரவாளர் என்று கூறப்படும் இக்காமா சாதிக் பாட்ஷா என்பவர் ரிஸ்வான் தந்தை ஹிதயத்துல்லாவை கடந்த 16ம் தேதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரூ.2 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசில் ஹிதயத்துல்லா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பிரிவுகளில் இக்காமா சாதிக் பாட்ஷா மற்றும் அவரது நண்பரான சென்னை மயிலாப்பூரை சேர்ந்த அயூப்கான் ஆகியோரை நேற்றிரவு கைது செய்தனர். இதைதொடர்ந்து தரங்கம்பாடி நீதிபதி கனிமொழி முன்னிலையில் 2 பேரையும் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
பல்வேறு காவல் நிலையங்களில் இக்காமா சாதிக் பாட்ஷா மீது கொலை முயற்சி, வழிப்பறி, கொடூர ஆயுதங்களை கொண்டு தாக்குதல், கலவரத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 20 வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும், 2022ம் ஆண்டு போலீசாரை துப்பாக்கியை காட்டி மிரட்டியபோது கைது செய்யப்பட்ட இக்காமா சாதிக் பாட்ஷா மீது போடப்பட்ட வழக்கு தேசிய புலனாய்வு முகமை பிரிவுக்கு மாற்றப்பட்டது. இக்காமா சாதிக் பாட்ஷா ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு நிதி மற்றும் ஆட்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு தெரியவந்ததால் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. மேலும், நீடூரில் உள்ள அவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post ரூ.2 கோடி கேட்டு மிரட்டிய ஐஎஸ் ஆதரவாளர் கைது: சென்னை நண்பரும் சிக்கினார் appeared first on Dinakaran.