சீர்காழியில் பத்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி

 

சீர்காழி, ஜூலை 21: சீர்காழியில் நடைபெற்ற தனியார் பள்ளி பத்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பில் 70க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். யிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மெட்ரிக் பள்ளிகளில் பணியாற்றும் பத்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலர் நிர்மலாராணி (தனியார் பள்ளிகள்) தலைமை தலைமை வகித்தார். பயிற்சி வகுப்பில், பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் எவ்வாறு 100% சதவீதம் தேர்ச்சி பெறுவது, நூற்றுக்கு 100 மதிப்பெண் எவ்வாறு பெறுவது போன்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் செயலாளர் ராஜ்கமல் கலந்து கொண்டு பேசினார். பயிற்சி வகுப்பில் தனியார் பள்ளிகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட தமிழ் ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். பெஸ்ட் பள்ளி முதல்வர் ராமலிங்கம் நன்றி கூறினார்.

The post சீர்காழியில் பத்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: