அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கவே பெற்றோர் ஆர்வமாக உள்ளனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

சென்னை: மாணவர் நலன் சார்ந்த திட்டங்களால் தனியார் பள்ளியைவிட அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கவே பெற்றோர் ஆர்வம் காட்டி வருவதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மேற்கு சைதாப்பேட்டையில் அமைந்துள்ள சென்னை பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மற்றும் மருத்துவம் (ம) மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பெருமக்கள், 10 மாணாக்கர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி 2024 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான திட்டத்தினை துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் சா.விஜயராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் பேசுகையில்,

அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கவே பெற்றோர் ஆர்வமாக உள்ளனர்: மா.சுப்பிரமணியன்

சென்னை சைதாப்பேட்டை அரசு பள்ளியில் மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். 2021 முதல் திமுக ஆட்சியில் இதுவரை 14.73 லட்சம் மிதிவண்டிகள் ரூ.823 கோடி செலவில் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், பகுதியாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5.47 லட்சம் பேருக்கு மிதிவண்டி வழங்கப்பட்டுள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்கள் வளர்ச்சியடைந்து வருகின்றனர்: அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு

திமுக ஆட்சியில் ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற்றம் அடைந்து வருவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை அரசு பள்ளியில் மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது. கல்வியையும், மருத்துவத்தையும் தமது இரு கண்களாக நினைத்து முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுகிறார். நிதி ஒதுக்கீட்டில் கல்விக்குத்தான் அதிக நிதியை முதலமைச்சர் ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட என பல்வேறு சமுதாய மக்கள் திமுக ஆட்சியில் வளர்ச்சியடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

The post அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கவே பெற்றோர் ஆர்வமாக உள்ளனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: