கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை: வரும் 31ம் தேதி வரை நடக்கிறது

சென்னை: கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை வரும் 31ம் தேதி வரை நடக்கிறது. சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: கிண்டியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ெடஸ்க்டாப் பப்ளிஷிங் ஆபரேட்டர், டிஜிட்டல் போட்டோகிராபர், டிராட்ஸ்மேன் (மெக்கானிக்கல்), பிட்டர், டூல் அன்ட் டை மேக்கர், டர்னர், புட் புரொடக்‌ஷன் (ஜெனரல்), புட் அன்ட் பீவரேஜ் சர்வீஸ் அசிஸ்டென்ட், ஸ்மார்ட் போன் டெக்னீஷியன் கம் ஆப் டெஸ்டர், இன்டஸ்ட்ரி டாடா 4.0வின் கீழ் நியூ ஏஜ் கோர்சஸ் மேனுபேக்சரிங் புராசஸ் கன்ட்ரோல் அன்ட் ஆட்டோமேஷன், அட்வான்ஸ்ட் சிஎன்சி மெஷினிங் டெக்னீஷியன், பேசிக் டிசைனர் அன்ட் விர்ச்சுவல் வெரிபையர் (மெக்கானிக்கல்), இன்டஸ்ட்ரியல் ரோபாட்டிக்ஸ் அன்ட் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீஷியன் ஆகிய தொழிற்பிரிவுகளில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாய்ப்பு தரும் விதமாக 2024ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை நடந்து வருகிறது.

இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்பும் தகுதியுள்ள மாணவர்கள் வருகிற 31ம் தேதிக்குள் நேரடியாக பயிற்சியில் சேரலாம். அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு அரசால் கட்டணமில்லா பயற்சி, விலையில்லா சீருடை மாதாந்திர உதவித் தொகை ரூ.750 மற்றும் விலையில்லா வரைபட கருவிகள் என பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பும் வழங்கப்படும். மேலும் விவரங்கள் அறிய இத்தொழிற்பயிற்சி நிலையத்தின் சேர்க்கை உதவி மையத்தை நேரில் அணுகலாம். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 044 -22501350.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை: வரும் 31ம் தேதி வரை நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: