கட்டுமான தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.5 வாடகையில் தங்குமிடம்: புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் குஜராத் முதல்வர்

அகமதாபாத்: குஜராத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.5 வாடகையில் தங்குமிடங்களை வழங்கும் புதிய திட்டத்தை முதல்வர் பூபேந்திரா படேல் நேற்று தொடங்கி வைத்தார். குஜராத் அரசு ஷ்ராமிக் பாசிரா என்ற புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன்படி கட்டுமான தொழிலாளர்களுக்கு தற்காலிக தங்குமிடங்கள் கட்டிக்கொடுக்கப்பட்டும். இந்த திட்டம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. அகமதாபாத்தின் ஜகத்பூர் பகுதியில் நடந்த விழாவில் முதல்வர் பூபேந்தரா படேல் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

இதேபோன்று காந்திநகர், வதோதரா, மற்றும் ராஜ்கோட் நகரங்களிலும் திட்டம் தொடங்கப்பட்டது. முதல்வர் பூபேந்தரா பேசுகையில், ‘‘தற்காலிக தங்குமிடங்கள் தயாரானதும் சுமார் 15ஆயிரம் கட்டுமான தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். கட்டிட தொழிலாளர்களுக்கு ஒருவருக்கு ஒரு நாளைக்கு ரூ.5 வாடகைக்கு தங்குமிடம் வழங்கப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளில் குஜராத் முழுவதும் சுமார் 3 லட்சம் கட்டுமான தொழிலாளர்களுக்காக இதுபோன்ற தங்குமிடங்கள் அமைக்கப்படும்” என்றார்.

The post கட்டுமான தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.5 வாடகையில் தங்குமிடம்: புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் குஜராத் முதல்வர் appeared first on Dinakaran.

Related Stories: