திருமலை: திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பதி ஏழுமலையான் கோயில் சார்பில் நிர்வகிக்கப்பட்டு வரும் வாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு ரூ.500 கட்டணம் செலுத்தினால் விஐபி தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் ஜூலை 22 முதல் நேரடியாக ஆப்லைனில் ஒரு நாளைக்கு 1000 டிக்கெட் மட்டும் வழங்கவும், ஆன்லைனில் 500 டிக்கெட்டுகளும் வழங்கப்பட உள்ளது. வாணி நன்கொடையாளர்களுக்கு விமான நிலையத்தில் உள்ள தற்போதைய முன்பதிவு கவுன்டரில் 100 டிக்கெட்டுகள் பெற்றுக் கொள்ளலாம். இதற்காக திருப்பதி விமான நிலைய கவுன்டரில் மட்டுமே போர்டிங் பாஸ் மூலம் ஆப்லைன் டிக்கெட் பெறலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஏழுமலையான் கோயிலில் ஒரு நாளைக்கு 1000 பக்தர்களுக்கு மட்டுமே விஐபி டிக்கெட் appeared first on Dinakaran.