கடலூர் மாவட்டம் மருங்கூர் அகழாய்வில் ரெளலட்டட் வகைப் பானை ஓடுகள் கண்டெடுப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் மருங்கூர் அகழாய்வில் இராசராசன் காலச் செம்புக் காசு, சுடுமண்ணால் ஆன வட்டச்சில்லுகள், பச்சை நிறக் கண்ணாடி மணி ஆகியவை கிடைத்தன. இன்று 122செ.மீ ஆழத்தில் ரெளலட்டட் வகைப் பானை ஓடுகள் இரண்டு கிடைத்துள்ளன. தமிழ்நாட்டில் அரிக்கமேடு, வசவசமுத்திரம், பூம்புகார், அழகன்குளம், கொற்கை, கீழடி ஆகிய இடங்களிலும் ஆந்திரா, ஒரிசா மாநிலக் கடற்கரை ஓரங்களில் உள்ள தொல்லியல் தளங்களிலும் இத்தகைய ரெளலட்டட் வகைப் பானை ஓடுகள் கிடைக்கின்றன.

பொதுவாக ரௌலட்டட் பானை ஓடுகள் உரோம நாட்டுப் பானைகள் எனக் கருதப்பட்டு வந்தன. தென்னிந்தியாவின் கிழக்குக் கடற்கரையை ஒட்டி வாழ்ந்த மக்களால் தயாரிக்கப்பட்ட மட்கலன்கள் என்று அண்மைக்கால ஆய்வுகள் கூறுகின்றன. இத்தகைய ரெளலட்டட் மட்கலன்கள் சங்க காலம் என்கின்ற தொடக்க வரலாற்றுக் காலத்தைச் சார்ந்தவை. எனவே, மருங்கூர் தொடக்க வரலாற்றுக் காலத்தைச் சார்ந்த தொல்லியல் தளம் என்பது உறுதிசெய்யப்படுகின்றது.

The post கடலூர் மாவட்டம் மருங்கூர் அகழாய்வில் ரெளலட்டட் வகைப் பானை ஓடுகள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: