கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு 75,748 கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு விநாடிக்கு 65,748 கனஅடியிலிருந்து 75,748 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை கடந்த 15 நாட்களுக்கு மேலாக தொடந்து பெய்து வருகிறது. குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

அதே போல் கேரளாவின் வயநாடு மற்றும் தமிழ்நாட்டிலுள்ள நீலகிரி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம்மும் உயர்ந்துகொண்டே வருகிறது. கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து 36,772 கன அடியாக அதிகரித்துள்ளது.

இந்த அணையில் 748 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களில் 8 அடி உயர்ந்துள்ளது. அதே போல் வயநாடு மற்றும் நீலகிரியில் பெய்து வரும் கனமழை காரணமாக மைசூரில் உள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து தொடந்து அதிகரித்து வருகிறது. கபினி அணைக்கு நீர்வரத்து 50 ஆயிரம் கன அடியை கடந்து நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

நீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி கபினி அணையிலிருந்து 70ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 3 அணிகளிலிருந்து மொத்தமாக 75,748 கனஅடி நீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.

The post கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு 75,748 கனஅடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: