×
Saravana Stores

சூலூர் அருகே தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலி

 

சூலூர்,ஜூலை 18: கோவை மாவட்டம் சூலூர் அடுத்த முத்துகவுண்டன் புதூரில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அழகர்சாமி என்பவரது அறையில், ஏற்பட்ட தீ விபத்தில் பெட்ரோல் டேங்கர் லாரி ஓட்டுநர்கள் அழகர்சாமி, சின்ன கருப்பு, முத்துக்குமார் ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் படுகாயம் அடைந்த பாண்டீஸ்வரன், மனோஜ், வீரமணி, தினேஷ் ஆகிய நால்வரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது தொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் படுகாயம் அடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாண்டீஸ்வரன், தினேஷ், மனோஜ் ஆகிய மூவரும் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மிகவும் கவலைக்கிடமான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீரமணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கோவையில் மது போதையில் பெட்ரோலை அலட்சியமாக பயன்படுத்தியதன் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 3 வாலிபர்கள் பலியான நிலையில் மேலும் ஒருவர் பலியாகி உள்ளார். இதன் மூலம் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

The post சூலூர் அருகே தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலி appeared first on Dinakaran.

Tags : Sulu ,SOLOOR ,AZAKARSAMI ,CHINNA BLACK ,MUTHAKUMAR ,ADHAKARSAMI ,MUTHUKOUNDON PUTHUR, KOWAI DISTRICT ,Sulur ,Dinakaran ,
× RELATED கோவை மாவட்டம் சூலூர் அருகே கார் ஷோரூமில் திடீர் தீவிபத்து