×
Saravana Stores

கத்தியால் வெட்டிய ரவுடி கைது

சேலம், ஜூலை 18: சேலம் திருமலைகிரியை சேர்ந்தவர் மணிகண்டன்(23). ரவுடியான இவர் மீது 2 அடிதடி வழக்குகள் இருக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதுபோதையில் வந்த அவர், அரிவாளால் லிங்கேஸ்வரன் என்பவரது வீட்டின் தகர சீட்டை வெட்டினார். இதனை தட்டிக்கேட்ட லிங்கேஸ்வரனை கத்தியால் தாக்கினார். மேலும் கத்தியை காட்டி அப்பகுதியில் மிரட்டினார். அவர் தாக்கியதில் லிங்கேஸ்வரனுக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து ரவுடி மணிகண்டனை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கத்தியால் வெட்டிய ரவுடி கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Manikandan ,Tirumalaikiri, Salem ,Lingeswaran ,Dinakaran ,
× RELATED ₹3 லட்சம் கடனுக்கு ₹40 லட்சம் கேட்டு...