×
Saravana Stores

பைக் மீது கார் மோதி 2 பேர் படுகாயம்

ஏற்காடு, ஜூலை 18: சேலம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீவர்ஷன். இவர் தனது நண்பரான அஜித்குமார் என்பவருடன், நேற்று டூவீலரில் ஏற்காடு வந்தார். பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு பக்கோடா பாயிண்ட் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த கார் டூவீலர் மீது மோதியது. இதில், இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த ஏற்காடு போலீசார், சம்பவ இடம் சென்று மதுபோதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய, ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜி(35) மற்றும் அவரது நண்பர்களான அரவிந்த்குமார், கார்த்தி ஆகியோரை மடக்கி பிடித்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post பைக் மீது கார் மோதி 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Yercaud ,Srivarshan ,Salem Sewwaipet ,Ajith Kumar ,Pakoda Point ,Dinakaran ,
× RELATED மாசடைந்து வரும் ஏற்காடு படகு இல்ல ஏரி:...