×
Saravana Stores

காவல் நிலையங்களிலேயே மக்கள் குறைதீர் முகாம்

சேலம், ஜூலை 18: தமிழகம் முழுவதும் வாரந்தோறும் புதன்கிழமைகளில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைகேட்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாநகர காவல்துறை சார்பில் 2 ஸ்டேஷன்களுக்கு ஒரு பொதுவான இடம் தேர்வு செய்யப்பட்டு புதன்கிழமைகளில் மக்கள் குறைகள் கேட்கப்பட்டு வந்தது. இந்நிலையில் புதிய கமிஷனராக பொறுப்பேற்றுள்ள பிரவீன்குமார் அபினபு, அந்தந்த காவல்நிலையங்களிலேயே குறைகேட்பு முகாம் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி நேற்று மாநகரில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் மக்கள் குறைகேட்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் அதிகாரிகள் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டனர்.

The post காவல் நிலையங்களிலேயே மக்கள் குறைதீர் முகாம் appeared first on Dinakaran.

Tags : Grievance Camp ,Salem ,Tamil Nadu ,Salem Metropolitan Police ,People's ,Police Stations ,
× RELATED அரியலூர் மாவட்ட தாலுகா அலுவலகங்களில்...