காவிரி பிரச்னை தீர்க்க மேனேஜ்மென்ட் போர்டு: அன்புமணி யோசனை

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து பாமக சார்பில் போட்டியிட்ட சி.அன்புமணிக்கு 56,000 வாக்குகள் கிடைத்தன. இதற்காக கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி செலுத்தும் நிகழ்ச்சி அங்குள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. பாமக தலைவர் அன்புமணி தலைமை தாங்கி பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் விக்கிரவாண்டியில் 66 ஆயிரம் வாக்குகளை அதிமுகவினர் பெற்றனர். ஆனால் இடைத்தேர்தலில் அதிமுகவிலிருந்து 40 ஆயிரம் பேர் திமுகவிற்கு வாக்களித்துள்ளனர்.

காவிரி நீர் விவகாரத்தில், காவிரி ஆணையம் நாள் ஒன்றுக்கு 1 டிஎம்சி தண்ணீர் கொடுக்கக் கூறியும் அதனை கொடுக்க முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவிக்கிறார். தமிழகத்திற்கு 177.72 டிஎம்சி தண்ணீர் கொடுக்க வேண்டுமென காவிரி ஆணையம் உத்தரவிட்டும், அதனை கர்நாடக அரசு கொடுக்கவில்லை. வெறும் உபரி நீர் மட்டுமே தமிழகத்திற்கு கொடுப்பதாக கூறுகிறது. காவிரியில் கேட்ட நீரைவிட பருவமழையால்தான் தமிழகத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரி நீருக்கு மேனேஜ்மென்ட் போர்டு அமைக்க வேண்டும். இதன்மூலம் தான் நிரந்தர தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

The post காவிரி பிரச்னை தீர்க்க மேனேஜ்மென்ட் போர்டு: அன்புமணி யோசனை appeared first on Dinakaran.

Related Stories: