சென்னை: தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை முயல் வேகத்தில் ஏறுவதும் ஆமை வேகத்தில் இறங்குவதுமாக இருந்து வருகிறது. அந்த வகையில், நேற்று முன்தினம் தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலையில் மேலும் மாற்றம் காணப்பட்டது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,785க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து சவரன் ரூ.54,280க்கு விற்கப்பட்டது.நேற்று தங்கம் விலையில் திடீரென அதிரடி மாற்றம் காணப்பட்டது. அதாவது, நேற்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,830க்கும், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,640க்கும் விற்கப்பட்டது. இந்த விலையேற்றம் நகை வாங்குவோரை அதிர்ச்சி அடைய செய்தது.
இந்த நிலையில், நகை பிரியர்களை மேலும் அச்சுறுத்தும் வகையில், தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ. 700 உயர்ந்து ரூ.55,000ஐ தாண்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.55,360-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.6,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து 5.100.50-5 விற்பனையாகிறது. இத்தகைய விலை உயர்வு, சாமானிய மக்கள் நகை வாங்கச் செய்வதை எட்டாக்கனியாக ஏற்படுத்தி உள்ளது.
The post எட்டாக்கனியாக மாறும் தங்க நகைகள்!.. ரூ. 55 ஆயிரம் உச்சத்தை தொட்டது ஒரு சவரன், ஒரு கிராம் ரூ. 7000ஐ நெருங்கியது!! appeared first on Dinakaran.