சேலம், ஜூலை 17: சேலம் மாவட்ட காவல்துறையில் ஒரே போலீஸ் ஸ்டேஷனில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்த போலீசாருக்கு விருப்ப இடமாறுதல் கடந்த வாரம் வழங்கப்பட்டது. இதில், மாவட்டத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு காவல்நிலையங்களில் பணியாற்றி வந்த சிறப்பு எஸ்ஐக்கள், ஏட்டுகள், போலீசார் என 207 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதைதொடர்ந்து மாவட்ட காவல்துறையில் மதுவிலக்கு பிரிவு, நெடுஞ்சாலை ரோந்து பிரிவு, கொளத்தூர் காரைக்காடு மற்றும் தீவட்டிப்பட்டி சோதனைச்சாவடிகளில் பணியாற்றி வரும் போலீசாருக்கான விருப்ப இடமாறுதலை எஸ்பி அருண்கபிலன் வழங்கியுள்ளார்.
இப்பிரிவுகளில் ஓராண்டு பணி முடித்ததும் இடமாறுதல் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, சோதனைச்சாவடிகள், மதுவிலக்கு, நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் பணியாற்றி வந்த 89 போலீசார், மாவட்ட சட்டம் ஒழுங்கு பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளனர். அதேபோல், சட்டம் ஒழுங்கு காவல்நிலையங்களில் பணியாற்றி வந்த 54 போலீசாரை மதுவிலக்கு, நெடுஞ்சாலை ரோந்து பிரிவுக்கு இடமாற்றி எஸ்பி அருண்கபிலன் உத்தரவிட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 143 போலீசார் மாற்றப்பட்டுள்ளனர். இதில், 15 பேர் சிறப்பு எஸ்ஐக்கள் ஆவர். இவர்களுக்கான இடமாறுதல் உத்தரவு ஆணை வழங்கப்பட்டது.
The post 89 மதுவிலக்கு போலீசார் உள்பட 143 பேர் இடமாற்றம் appeared first on Dinakaran.