பூரி ஜெகநாதர் கோயிலின் கருவூல உள்அறை நாளை மீண்டும் திறப்பு: ஆபரணங்கள் தற்காலிக அறைக்கு மாற்றம்

பூரி: ஓடிசாவின் பூரி ஜெகநாதர் கோயில் கருவூலத்தின் உள்அறையை திறந்து அங்குள்ள விலை உயர்ந்த பொருள்களை மதிப்பிட, பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டது. ரத்ன பந்தர் எனப்படும் கருவூலத்தின் உள்அறையானது 46 ஆண்டுகளுக்கு பின் கடந்த ஞாயிறன்று திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று கோயில் நிர்வாகத்தின் தலைமை நிர்வாகி அரபிந்தா பத்தீ, தலைமையில் ஆலோசனைகூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரத்ன பந்தரின் உள்அறையை மீண்டும் திறப்பது என்றும் இங்குள்ள மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் ஆபரணங்களை கோயில் வளாகத்திற்குள் அமைக்கப்பட்ட தற்காலிக கருவூலத்துக்கு மாற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த தற்காலிக கருவூலம் சிசிடிவி கேமராக்கள், தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பிற தேவையான முன்னெச்சரிக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. கருவூலத்தின் உள்அறையானது மீண்டும் நாளை காலை 9.51மணி முதல் 12.15மணி வரை திறக்கப்பட்டு ஆபரணங்கள் மாற்றப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பூரி ஜெகநாதர் கோயிலின் கருவூல உள்அறை நாளை மீண்டும் திறப்பு: ஆபரணங்கள் தற்காலிக அறைக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: