100 ஆண்டு பழமை வாய்ந்த மோட்டார் வாகன பிரிவு கட்டிடம் மறுசீரமைப்பு

 

கோவை, ஜூலை 16: கோவை அவினாசி ரோடு போலீஸ் பயிற்சி பள்ளி (பி.ஆர்.எஸ்.) வளாகத்தில் கவாத்து மைதானம் உள்ளது. இதன் அருகில் 100 ஆண்டு பழமை வாய்ந்த மோட்டார் வாகன பிரிவு அலுவலகம் உள்ளது. இது, மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் பின்புறம் காவலர்களுக்கான ஓய்வு அறை, இசை வாத்தியங்களுக்கான அறை, மின்சார அறை, காவலர்களுக்காக புதிய கழிவறைகளும் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் திறப்புவிழா நேற்று நடைபெற்றது.

இதனை, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ‘’பழைய கட்டிடங்களை இடிக்க வேண்டாம் என்ற நோக்கில் மறுசீரமைப்பு செய்து, இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. காவலர்களுக்காக கட்டப்பட்டுள்ள ஓய்வு அறைகளும், கவாத்து பயிற்சி மேற்கொள்ளும் காவலர்களுக்காக இதே பகுதியில் கட்டப்பட்டுள்ள கழிவறைகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார். விழாவில், மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார், உதவி கமிஷனர் சேகர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

The post 100 ஆண்டு பழமை வாய்ந்த மோட்டார் வாகன பிரிவு கட்டிடம் மறுசீரமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: