×
Saravana Stores

அதிகாரி மனைவியிடம் 5 பவுன் நகை அபேஸ்

சேலம், ஜூலை 16: சேலம் அருகேயுள்ள அயோத்தியாப்பட்டணம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் இளவரசன். இவர் வெள்ளாளகுண்டம் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கோகிலா(36). இவர் கடந்த 11ம் தேதி இரவு, வீட்டில் படுத்திருந்தார். காலையில் எழுந்த கோகிலா, கழுத்தில் செயின் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காரிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அப்புகாரின் ேபரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோகிலா வீட்டிற்குள் மர்மநபர்கள் புகுந்து, அவர் அணிந்திருந்த 5பவுன் நகையை நைசாக திருடிச்சென்றார்களா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post அதிகாரி மனைவியிடம் 5 பவுன் நகை அபேஸ் appeared first on Dinakaran.

Tags : Salem ,Kaliyamman Koil Street, Ayodhyapatnam ,Vellalagundam Power Board ,Kokila ,Dinakaran ,
× RELATED ₹3 லட்சம் கடனுக்கு ₹40 லட்சம் கேட்டு...