×
Saravana Stores

திமுக ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் இல்ல மண விழா

காடையாம்பட்டி, ஜூலை 16: சேலம் மத்திய மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளரான காடையாம்பட்டி கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தங்கம்- சரளா தம்பதியின் மகன் சூரியபிரகாஷ், காஞ்சிபுரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கேசவன்- சாந்தி தம்பதியினரின் மகள் கமலி ஆகியோரது திருமண வரவேற்பு விழா, பெரியார் பல்கலைக்கழகம் அருகே உள்ள விஜயசேஷ மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். விழாவில் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், தர்மபுரி மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்ரமணி, பழனியப்பன், தர்மபுரி மணி எம்.பி., பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் பாலசுப்பிரமணி, ரமேஷ், அறிவழகன், ரவிச்சந்திரன் மாநில ஒப்பந்ததாரர் காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினர்.

The post திமுக ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் இல்ல மண விழா appeared first on Dinakaran.

Tags : DMK ,Adi Dravidar Welfare Committee Vice Organizer House Wedding Ceremony ,Kadaiyampatti ,Suriyaprakash ,Thangam-Sarla ,Kanchanayakanpatti ,Salem Central District ,Kamali ,Kanchipuram district ,Tasmac ,Kesavan- Shanti ,
× RELATED திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி,...