கலவரத்தில் கல்லூரி மாணவர் பலி திரிபுரா பா.ஜ அமைச்சரை விரட்டிய மக்கள்

அகர்தலா: திரிபுரா தலாய் மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பா.ஜ அமைச்சர் டிங்குராய் தலைமையிலான குழுவினரை பொதுமக்கள் விரட்டியடித்தனர். திரிபுராவில் பா.ஜ ஆட்சி நடக்கிறது. முதல்வராக மாணிக் சகா உள்ளார். அங்கு தலாய் மாவட்டத்தில் உள்ள கந்தத்விசா பகுதியில் ஜூலை 7ம் தேதி உள்ளூர் சந்தையில் இரு குழுக்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பரமேஷ்வர் ரியாங் என்ற கல்லூரி மாணவர் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஜூலை 12 அன்று அகர்தலாவில் உள்ள ஜிபிபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது பலியானார்.

மாணவரின் மரணம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் கந்தத்விசா கிராம பகுதியில் பயங்கர வன்முறை வெடித்தது. ஜூலை 12 அன்று ஒரு கும்பல் சரமாரியாக கிராமத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. 40 வீடுகள், 30 கடைகள் எரிக்கப்பட்டன. 300 குடும்பங்கள் வீட்டை காலி செய்து தப்பித்தனர். இதனால் 11 திருமணங்கள் ரத்து செய்யப்பட்டன. அந்த பகுதியை சமூகநலத்துறை அமைச்சர் டிங்குராய் தலைமையிலான 4 பேர் குழு பார்வையிட சென்றது. அப்போது கிராமமக்கள் ஆத்திரத்துடன் அமைச்சரிடம் சரமாரி கேள்வி எழுப்பி அவரை விரட்டியடித்தனர்.

The post கலவரத்தில் கல்லூரி மாணவர் பலி திரிபுரா பா.ஜ அமைச்சரை விரட்டிய மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: