சிறப்பு அந்தஸ்து கேட்டு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஸ்டிரைக் செய்ய வேண்டும்: காங்கிரஸ் யோசனை

புதுடெல்லி: ‘மாநில சிறப்பு அந்தஸ்து வேண்டுமென கேட்டுக் கொண்டே இருந்தால் போதாது. இதற்காக பீகார் முதல்வர் வேலை நிறுத்தம் செய்ய வேண்டும்’ என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. நிதி ஆயோக்கின் 2023-24ம் நிதியாண்டிற்கான மாநிலங்களின் வளர்ச்சி குறியீடு பட்டியல் கடந்த 12ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் பீகார், ஜார்க்கண்ட், நாகலாந்து ஆகிய மாநிலங்கள் கடைசி இடத்தை பிடித்துள்ளன. பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பீகார் முதல்வர் நிதிஷ் ஏற்கனவே நீண்ட காலமாக மாநில சிறப்பு அந்தஸ்து கேட்டு வருகிறார். நிதி ஆயோக் அறிக்கையை தொடர்ந்து அம்மாநில அமைச்சர்கள், ‘‘ஒன்றிய அரசிடம் இருந்து சிறப்பு நிதி அல்லது சிறப்பு அந்தஸ்து பெற முற்றிலும் தகுதியான மாநிலமாக பீகார் உள்ளது என்பதை நிதி ஆயோக் பட்டியல் காட்டுகிறது’’ என்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘மாநில சிறப்பு அந்தஸ்து பெறுவதற்காக, கட்சிக் கூட்டங்களில் பத்திரிகயைாளர்களை சந்தித்து பேட்டி தருவது, தீர்மானம் நிறைவேற்றுவதை தாண்டி பீகார் முதல்வர் வேறென்ன செய்திருக்கிறார்? வேறெதையும் செய்யாத அவர் வெறுமனே பேசிக் கொண்டே இருக்கிறார். இப்போது கட்டாயம் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து பெற்றுத் தர வேண்டிய கட்டத்தில் முதல்வர் நிதிஷ் குமார் இருக்கிறார். இதற்காக அவர் ஸ்டிரைக் (வேலை நிறுத்தம்) செய்ய வேண்டும். இதே நிலையில்தான் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் இருக்கிறார்’’ என கூறி உள்ளார். நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆகிய இரு கட்சிகளுமே ஒன்றியத்தில் பாஜ கூட்டணி ஆட்சி அமைக்க முக்கிய காரணமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post சிறப்பு அந்தஸ்து கேட்டு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஸ்டிரைக் செய்ய வேண்டும்: காங்கிரஸ் யோசனை appeared first on Dinakaran.

Related Stories: