தமிழகத்தில் மின் உற்பத்திக்கு கைகொடுக்கும் காற்றாலைகள்

நெல்லை: இந்தியாவிலேயே காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தில் ஜூன் தொடங்கி செப்டம்பர் வரை காற்றாலை சீசனாக கருதப்படுகிறது. குமரி மற்றும் நெல்லை, தென்காசியின் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் இருந்து காற்றாலை மின்சாரம் அதிகம் உற்பத்தி செய்யப்படும்.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தற்போது தென் மேற்கு பருவ காற்று பலமாக வீசி வருவதால், கடந்த 3 தினங்களாக காற்றாலை மின் உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் (13ம் தேதி) நிலவரப்படி தமிழகத்தின் ஒட்டு மொத்த காற்றாலை மின் உற்பத்தி 4,882 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. நேற்று காலை 8 மணி நேர நிலவரப்படி நெல்லை மண்டலத்தில் காற்றாலை மின் உற்பத்தி 2006 மெகாவாட்டாகவும், ஈரோடு மண்டலத்தில் 1141 மெகாவாட்டாகவும் இருந்தது.

கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் காற்றாலைகளின் மின் உற்பத்தி 4 ஆயிரத்தை தாண்டியே உள்ளதாக காற்றாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அதிகரிக்கும் காற்றாலை மின் உற்பத்தியால், மின்தட்டுப்பாடு பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் மின் தேவை நாள் ஒன்றிற்கு 21 ஆயிரம் மெகாவாட்டிற்கும் அதிகமாக உள்ள நிலையில், காற்றாலை மின்சாரம் தற்போது ஓரளவிற்கு கை கொடுக்க தொடங்கியுள்ளது.

The post தமிழகத்தில் மின் உற்பத்திக்கு கைகொடுக்கும் காற்றாலைகள் appeared first on Dinakaran.

Related Stories: