விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வெற்றி கூடலூரில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

 

ஊட்டி, ஜூலை 14: விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ஊட்டி நகர திமுக சார்பில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடந்தது. இதில், திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிட்டார். இவரை எதிர்த்து பாமக சார்பில் அன்புமணி போட்டியிட்டார்.

இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றார். தொடர்ந்து, தமிழகம் முழுவதும் திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். ஊட்டி நகர திமுக சார்பில் ஊட்டி கேசினோ சந்திப்பு பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ் தலைமை வகித்தார்.

மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், மாவட்ட பொருாளர் நாசர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், ஊட்டி நகர துணை செயலாளர் கார்டன் கிருஷ்ணன், ரீட்டாமேரி, நகர பொருளாளர் அணில்குமார், பேச்சாளர் ராஜா, மஞ்சுகுமார், தம்பி இஸ்மாயில், அணிகளின் அமைப்பாளர்கள் காந்தல் ரவி, கார்த்திக், நிக்கோலஸ், சிவா, மணி, மோசஸ், முஸ்தபா, சாதிக், வகாப், அமலநாதன், வெங்கடேஷ், கவுன்சிலர் செல்வராஜ், புஷ்பராஜ், சத்தியராஜ், ராஜா, குண்டன், ராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வெற்றி கூடலூரில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: