நூருல் இஸ்லாம் உயர்கல்வி மையம் மலேசியா பல்கலை.யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தக்கலை,ஜூலை 13: தக்கலை நூருல் இஸ்லாம் உயர்கல்வி மையம் , மலேசியா துன் ஹுசைன் ஆன் பல்கலைக்கழகம் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நூருல் இஸ்லாம் உயர்கல்வி மையம் வேந்தர் டாக்டர் மஜீத் கான் கையெழுத்திட்டார். நிகழ்ச்சியில் துணைவேந்தர் (கல்வி) முனைவர் ஆர். பெருமாள்சாமி, இணை துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர். ஏ. ஷாஜின் நற்குணம், பதிவாளர் டாக்டர் பி. திருமால்வளவன், மற்றும் சர்வதேச கல்வி விவகார இயக்குனர் டாக்டர் லாலு கிளாட்சன் ராபின் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வாயிலாக, நூருல் இஸ்லாம் உயர்கல்வி மையத்தின் ஆட்டோமொபைல் பொறியியல் துறை சேர்ந்த மூன்று மாணவர்கள் தற்போது மலேசியாவில் மூன்று மாத பயிற்சித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஒத்துழைப்பு இரு நிறுவனங்களுக்கும் கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த கூட்டாண்மை மாணவர் மற்றும் ஆசிரியர் பரிமாற்ற திட்டங்கள், கூட்டு ஆராய்ச்சி திட்டங்கள் மற்றும் கல்வி வளங்களின் பரஸ்பர பகிர்வுக்கு வழிவகுக்கும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

The post நூருல் இஸ்லாம் உயர்கல்வி மையம் மலேசியா பல்கலை.யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Related Stories: