×
Saravana Stores

கல்லூரி மாணவி மாயம்

கெங்கவல்லி, ஜூலை 12: வீரகனூர் பேரூராட்சி காமாட்சி அம்மன் கோயில் பகுதியில், வசித்து வருபவர் மாதேஸ்வன். காய்கறி வியாபாரி. இவரது மகள் சௌந்தர்யா(19). சேலம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2ம் ஆண்டு பிஎஸ்சி படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வீட்டில் இருந்த மாணவி சௌந்தர்யா, அருகில் உள்ள கடைக்கு சென்று வருவதாக கூறிச்சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கம் தேடியும் கிடைக்காததால், மாதேஸ்வரன் வீரகனூர் போலீசில் தனது மகளை காணவில்லை என புகார் அளித்தார். இதன்பேரில், இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து, மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறார்.

The post கல்லூரி மாணவி மாயம் appeared first on Dinakaran.

Tags : Mayam ,Kengavalli ,Matheswan ,Kamachi Amman ,Veerakanur parish ,Soundarya ,Salem Government College of Arts and Sciences ,
× RELATED செவிலியர் உள்பட 2 பெண்கள் மாயம்