×
Saravana Stores

மத்திய சிறை கைதிக்கு சிகிச்சை

சேலம், ஜூலை 12: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம்(46). இவரை திருச்செங்கோடு போலீசார் வழக்கு ஒன்றில் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்து இருந்தனர். இவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளதால் தொடர்ந்து மருந்து மாத்திரைகள் எடுத்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, சண்முகத்திற்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சிறை மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post மத்திய சிறை கைதிக்கு சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Salem ,Sanmugham ,Trincomode district, Namakkal district ,Trichengo ,Salem Central Prison ,Dinakaran ,
× RELATED ஆதிச்சநல்லூரில் சோகம் தாய், மகன் தூக்கிட்டு சாவு