இதுகுறித்து ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், ‘இரு நாட்டு தூதுக்குழுக்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த அமர்வை ரத்து செய்வது என்பது ஏற்கனவே திட்டமிட்ட ஒன்றுதான்’ என்றார். பிரதமர் மோடி ரஷ்யாவில் இருந்த போது, உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 41 பேர் கொல்லப்பட்டனர். இதனை மோடி மறைமுகமாக விமர்சித்தார். அப்பாவி குழந்தைகளின் மரணம், தனது இதயத்தை உடைக்கும் வலி என்று புதினிடம் மோடி கூறினார். மோடியின் இந்த கருத்து புடினை கோபப்படுத்தியதாக செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
The post திட்டமிட்ட பேச்சுவார்த்தை திடீர் ரத்து; மோடியின் விமர்சனத்தால் புடின் கோபம்: ரஷ்ய அதிகாரி விளக்கம் appeared first on Dinakaran.