சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் சென்னை உட்பட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, நீலகிரி மற்றும் கோவை, தேனி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.