சேலம், ஜூலை 11: சேலம் கன்னங்குறிச்சி சத்தியநாராயணமூர்த்தி நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ்(48). இவர் நேற்றுமுன்தினம் மாலை 6 மணியளவில் கோம்பைப்பட்டியில் பெரியாண்டிச்சியம்மன் கோயில் அருகே காலியான இடத்தில் இருந்து மது குடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் தகராறில் ஈடுபட்டதுடன், வெங்கடேஷ் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கனனங்குறிச்சி போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மது குடித்த நபரிடம் 4 பவுன் நகை பறிப்பு appeared first on Dinakaran.