அயோத்தியாப்பட்டணம், ஜூலை 10: சேலம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த தைலானூர் ஊராட்சியில், கல்வராயன் காட்டில் பொதுப்பாதை உள்ளது. இதை மலை வாழ்மக்கள், கிராமத்தினர் என பயன்படுத்தி வந்தனர். ஆனால் சில நாட்களாக, பொதுப்பாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்தனர். இதனால் அவ்வழியாக செல்ல சிரமம் ஏற்பட்டது. இதயைடுத்து ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, பாமக மாணவரணி மாநில செயலாளர் விஜயராசா தலைமையில் 50க்கும் மேற்பட்டோர், நேற்று அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அதிகாரிகள் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதன் பேரில், புகார் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.
The post பிடிஓ அலுவலகத்தை பாமகவினர் முற்றுகை appeared first on Dinakaran.