புதிய தனியார் முதலீடு வீழ்ச்சி: காங். குற்றச்சாட்டு

புதுடெல்லி: இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் புதிய தனியார் முதலீடு கடும் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஒன்றிய அரசை காங்கிரஸ் சாடியுள்ளது. காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில், ‘‘பிரதமர் மோடி உருவாக்கிய அநியாய காலத்தில் நாளுக்கு நாள் பொருளாதார தோல்வி என்பது புதிய சாதனையாக உள்ளது. ஏற்கனவே 45 ஆண்டுகளில் இல்லாத வேலைவாய்ப்பின்மை விதிகம், 50 ஆண்டுகளில் குறைந்த குடும்ப சேமிப்பு மற்றும் உண்மையான கிராமப்புற நுகர்வு குறைந்தது உள்ளிட்டவற்றை பார்த்துள்ளோம்.

ஊடக அறிக்கையின்படி , 2023-24ம் நிதியாண்டில் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் கார்ப்பரேட் நிறுவனங்கள் ரூ.44,000கோடிக்கு புதிய முதலீட்டை அறிவித்துள்ளன. இது 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவாகும். மன்மோகன் சிங் பிரதமராக இருந்த தசாப்தத்தோடு ஒப்பிடுகையில், அநியாய காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதலீடு வெகுவாக குறைந்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 33.4சதவீதமாக இருந்தது தற்போது 28.7சதவீதமாக குறைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post புதிய தனியார் முதலீடு வீழ்ச்சி: காங். குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: