பெருந்துறையில் குடிநீர் குழாய்களை திருடிய மேட்டூர் வாலிபர் கைது

 

ஈரோடு, செப்.30: பெருந்துறையில் பேரூராட்சி சார்பில் பதிக்க வைக்கப்பட்டிருந்த ரூ.1.90 லட்சம் மதிப்பிலான குடிநீர் குழாய்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதில், பெருந்துறை அடுத்த எல்லைமேட்டில் பதிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.1.90 லட்சம் மதிப்பிலான 72 குழாய்கள் மாயமாகியிருந்தன.

இதையடுத்து குடிநீர் குழாய் பதிக்கும் திட்ட மேலாளர் அங்கு சென்று பார்த்தபோது, குடிநீா் குழாய்கள் திருடப்பட்டிருப்பதை உணர்ந்து பெருந்துறை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், குடிநீர் குழாய்களை திருடியது, குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக வந்த சேலம் மாவட்டம் மேட்டூர் மின் நகரை சேர்ந்த மாதையன் மகன் கார்த்திக் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து கார்த்திக்கை போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

The post பெருந்துறையில் குடிநீர் குழாய்களை திருடிய மேட்டூர் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: