காரியாபட்டி அருகே வேளாண்மை பயிற்சி முகாம்

காரியாபட்டி, ஜூலை 5: காரியாபட்டி வேளாண்மை துறை அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் பாஞ்சார் கிராமத்தில் வேளாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது. அங்கக இடுபொருட்கள் தயாரித்தல் என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் காரியாபட்டி செல்வராணி சிறப்புரை ஆற்றினார். அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைவர் செல்வி ரமேஷ் கரிம உரங்கள் மற்றும் அங்கக இடுபொருட்கள் தயாரித்தல் அவற்றின் பயன்பாடுகள் பற்றி சிறப்புரையாற்றினார்.

வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் வேணுதேவன் பஞ்சகாவியா மீன் அமிலம் தயாரித்தல், விதை நேர்த்தி செய்தல் பற்றி சிறப்புரையாற்றினார். துணை வேளாண்மை அலுவலர் ராமச்சந்திரன் வேளாண் மானிய திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் முத்துக்கருப்பன் நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கணேஷ் பிரபு, அருண்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

The post காரியாபட்டி அருகே வேளாண்மை பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: