புதிய பாட்டிலில் பழைய மது… புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டி செல்லமேஸ்வர் கடும் விமர்சனம்

டெல்லி : புதிய குற்றவியல் சட்டங்களை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டி செல்லமேஸ்வர் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய சட்டங்களுக்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷய அதினியம் ஆகியவை இன்று 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், வழக்கறிஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அதனை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துள்ளன. இந்த நிலையில் புதிய குற்றவியல் சட்டங்களை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜஸ்டி செல்லமேஸ்வர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

புதிய பாட்டிலில் பழைய மது என்றும் பெயரளவில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுவிட்டு அடிப்படை சாரத்தில் மாற்றம் எதுவுமில்லை என்றும் அவர் சாடி உள்ளார். மேலும் பேசிய அவர், ” அமலுக்கு வந்துள்ள பிஎஸ்ஏ என அழைக்கப்படும் இந்திய சாட்சியச் சட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்களின் கீழ், வழக்கு விசாரணைகளில் தேவையற்ற தாமதத்தைத் தவிர்க்க நீதிமன்றங்கள் அதிகபட்சம் இரண்டு ஒத்திவைப்புகளை மட்டுமே மேற்கொள்ள முடியும். குற்றவியல் வழக்குகளில் விசாரணை முடிந்து 45 நாட்களுக்குள் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.விசாரணையின் முதல் 60 நாட்களுக்குள் குற்றச்சாட்டுகள் கட்டமைக்கப்பட வேண்டும். இத்தகைய கடுமையான காலக்கெடுவை நீதிமன்றங்கள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றன என்ற கேள்வி உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.”

The post புதிய பாட்டிலில் பழைய மது… புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டி செல்லமேஸ்வர் கடும் விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: