காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் சாலையோர பள்ளம்: பொதுமக்கள் அச்சம்

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து நகரின் முக்கிய பகுதிகளான சங்கூசாபேட்டை, காந்தி சாலை, ரயில்வே சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு மதுராந்தோட்ட தெரு வழியாக செல்ல வேண்டும். பேருந்து நிலையத்தில் இருந்து அதிகளவிலான மக்கள் மதுராந்தோட்டம் தெரு வழியாக சென்று வருகிறார்கள். மேலும், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ – மாணவிகளும், அலுவலகம் செல்வோரும் இந்த தெருவை தான் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், இச்சாலை குறுகலாக இருப்பதால் நடந்து செல்லும் மக்களும், வாகனத்தில் செல்பவர்களும் சிரமத்துக்கிடையே பயணம் செய்து வருகிறார்கள். இச்சாலையில் உள்ள மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் சுமார் 200 மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் பின்புறம், சாலை வளைவில் உள்ள மழைநீர் வடிகால்வாயில், மண் அரிப்பு ஏற்பட்டு, சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால், சேக்குபேட்டை கவரை தெருவில் இருந்து இருசக்கர வாகன ஓட்டிகள், சாலை வளைவில் திரும்பும்போது நிலைதடுமாறி, பள்ளத்தில் தவறி விழுந்து அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே, மதுராந்தோட்ட தெருவில், மழைநீர் வடிகால்வாயில், மண் அரிப்பால் சாலையோரம் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் சாலையோர பள்ளம்: பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: