அரிசி கடத்தலை தடுப்பது குறித்து தமிழக-கேரள அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்

 

கம்பம், ஜூன் 29: கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்தி செல்வதை தடுப்பது குறித்து, கம்பத்தில் தமிழக-கேரள அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்தி செல்வதை தடுக்கவும், ரேசன் அரிசியை கடத்துவோர் மீது தக்க நடவடிக்கைகள் எடுக்கவும் தமிழக மற்றும் கேரள சிவில் சப்ளை அதிகாரிகள் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு போலீசார் இடையே கலந்தாய்வு கூட்டம் கம்பம் நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு தேனி மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் சாந்தி தலைமை தாங்கினார். உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா, கேரள மாநிலம் பீர்மேடு தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் மோகனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தேனி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விவாதித்தனர்.

கூட்டத்தில் இரு மாநில உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், வருவாய்த் துறையினர், போலீசார் குழுவாக இணைந்து இரு மாநில சோதனை சாவடியில் காய்கறி வாகனங்கள், சரக்கு வானங்கள், மோட்டார் சைக்கிள்கள், பஸ் பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொள்வது எனவும், மேலும் தேனி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு அரிசி கடத்தும் வாகனங்களையும், அரிசி கடத்தல்காரர்களையும் அடையாளம் காட்டி தமிழக போலீஸாரிடம் ஒப்படைக்க வலியுறுத்தப்பட்டது. இதில் இருமாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post அரிசி கடத்தலை தடுப்பது குறித்து தமிழக-கேரள அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: