பிரபல கூலிப்படை கும்பல் தலைவனும், பாஜக பிரமுகருமான சீர்காழி சத்யாவை துப்பாக்கியால் சுட்டு பிடித்தது போலீஸ்..!!

செங்கல்பட்டு: பிரபல கூலிப்படை கும்பல் தலைவனும், பாஜக பிரமுகருமான சீர்காழி சத்யா மற்றும் கூட்டாளிகள் 3 பேரை மாமல்லபுரம் அருகே போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். பிரபல ரவுடி சீர்காழி சத்யா கடந்த 2021-ல் பாஜக இணைந்துள்ளார். திருச்சி ராமஜெயம் கொலை வழக்கிலும் உண்மை கண்டறியும் சோதனைக்கு ரவுடி சத்யா உட்படுத்தப்பட்டவர்.

போலீசாரால் தேடப்பட்டு வரும் ரவுடி சத்தியாவை ரகசிய தகவல் அடிப்படையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில், காரில் வந்த கும்பலை மடக்கி பிடித்தனர். போலீசாரை தாக்கி விட்டு ரவுடி சத்யா மற்றும் அவரது கூட்டாளிகள் தப்ப முன்ற போது போலீசார் அவர்களை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். சுட்டு பிடிக்கப்பட்ட சத்யாவிடம் இருந்து ஒரு கை துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் சுட்டதில் காலில் பலத்த காயம் அடைந்த ரவுடி சத்யா செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post பிரபல கூலிப்படை கும்பல் தலைவனும், பாஜக பிரமுகருமான சீர்காழி சத்யாவை துப்பாக்கியால் சுட்டு பிடித்தது போலீஸ்..!! appeared first on Dinakaran.

Related Stories: